தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ரஜினியின் வழி தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை' - கமல் பாராட்டு - டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி

டெல்லி வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'ரஜினியின் வழி தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார் .

Rajini denounces Delhi violence
Rajini denounces Delhi violence

By

Published : Feb 26, 2020, 9:31 PM IST

சென்னை போயஸ் தோட்டத்தில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "டெல்லி வன்முறைச் சம்பவம் மத்திய உளவுத் துறையின் தோல்வியைக் காட்டுகிறது. நாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது சரியான போக்கு கிடையாது. வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் முன்னரே கிள்ளியெறியப்பட வேண்டும். ஒன்று வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கண்டணம் தெரிவித்தார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த். இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை" என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

டெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details