தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பிறருக்காகப் போராடும் மருத்துவர்களால்தான் உலகம் சுவாசிக்கிறது’ - கமல் - Kamal tweets praising doctors

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Kamal tweets praising doctors
Kamal tweets praising doctors

By

Published : Mar 11, 2020, 11:05 PM IST

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் உலக நாடுகள் கலங்கிப் போயுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமலிருக்க பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கையாண்டுவருகின்றன.

குறிப்பாக, அந்தந்த நாடுகளிலுள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகின்றனர். அல்லும்பகலும் கண் விழித்து நோயாளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன்னர், கடுமையாக உழைத்து களைத்துப் போன சீன மருத்துவர்களின் புகைப்படம் வெளியாகி உலக மக்களிடையே நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

கமல் ட்வீட்

தற்போது நடிகர் கமல்ஹாசன் மருத்துவர்களைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். மனித இனத்திற்கு எதிரான கொரோனா தாக்குதலுக்கு எதிராக அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எனவும், பிறருக்காகப் போராடும் மருத்துவர்களின் சேவையால்தான் உலகம் பயமின்றி சுவாசிப்பதாகவும் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இலங்கையையும் விட்டுவைக்காத கொரோனா

ABOUT THE AUTHOR

...view details