நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தேர்தல் தொடங்கியது. வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மகள் ஸ்ருதியுடன் கமல்ஹாசன் வாக்களிப்பு!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார்.
இதனையடுத்து மீதம் இருக்கும் 38 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் வரிசையில் அவர் நீண்ட நேரம் காத்திருந்தார்.
இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திர கோளாறு சரியான பிறகு கமல்ஹாசனும், அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.