தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனா பரவ மக்களின் அலட்சியமே காரணம்' - கமல்ஹாசன் - Corona virus

மக்களின் அலட்சியத்தால்தான் கரோனா வைரஸ் பரவுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

By

Published : Jun 9, 2020, 10:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதனிடையே மக்களின் அலட்சியத்தால் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கமல்ஹாசன் பதிவு

நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம், நாமே தீர்வாக மாறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details