சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், அவர் மீது காலணியும் வீசப்பட்டது. இந்த சம்பவமும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இன்னொரு காலணிக்காக காத்திருக்கிறேன்: கமல்ஹாசன் - bjp
சென்னை: இன்னொரு காலணிக்காக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Kamalhassan
இந்நிலையில் சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “நான் காந்தியின் ரசிகன். ஒரு காலணி வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு காலணியும் வரும். அதற்காக காத்திருக்கிறேன். என் மீது காலணி வீசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அல்ல” என்றார்.