தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்த மத்திய அரசிற்கு கமல் ஹாசன் வலியுறுத்தல் - Kamal emphasis GST Council Meet

சென்னை: ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

KAMAL
KAMAL

By

Published : May 9, 2021, 4:22 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு ஜி.எஸ்.டி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த பல மாதங்களாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை.

கரோனா பேரிடர் குறித்து விவாதம்:

கரோனா பேரிடர் காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கவச ஆடைகள், வெப்பநிலை ஸ்கேனர்கள், ஆக்ஸிமீட்டர்கள். வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

சிக்கல்களுக்கான தீர்வுகள் எப்போது?

சிறுகுறு வணிகம், விமானப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள். கேளிக்கை அரங்குகள், வணிக வளாகங்கள், பெரிய அங்காடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க தேவையான உதவிகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டும். அத்துடன் அலுவலர்களை அணுகுவதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வுகள் கண்டடையப்பட வேண்டும்.

பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து தேவையான முடிவுகளை எடுக்க ஏதுவாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details