வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று (நவ.25) புதுச்சேரி கரையை அடைந்து, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கடந்தது. இந்தப் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். குடிசை வீடுகள் உள்பட மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்தன. 3,085 நிவாரண முகாம்களில் மொத்தம் 2,27,317 பேர் தங்கவைக்கப்பட்டனர்.
நிவர் புயல்: சைதாப்பேட்டையில் கமல்ஹாசன் ஆய்வு! - makkal needhi maiam
சென்னை: சைதாப்பேட்டையில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
kamal-haasan-
இந்த நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க:சைதாப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு