சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சமீபத்தில் அங்கிருந்து சென்னை திரும்பினார். இதனையடுத்து தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கமல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கமல்ஹாசன் - நடிகர் கமலுக்கு கரோனா
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.கமலின் இந்த ட்வீட்டை அடுத்து பிரபலங்களும் ரசிகர்களும், அவர் கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணம் குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்!