விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன் 17) சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் கேயார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், 'வெளிநாடுகளில் ரூ.100 கோடி வசூலை தொட்டது. விக்ரம் திரைப்படம்/ கேரளாவில் தற்போது வரை 35 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் 7 மடங்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 கோடி ஷேர் கிடைத்துள்ளது' என்றார்.
தொடர்ந்து பேசிய இயக்குநனர் லோகேஷ் கனகராஜ், 'கமல் கொடுத்த சுதந்திரம்தான் வெற்றிக்கு காரணம். விக்ரம் வெற்றி, பதற்றத்தையும் , பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வெற்றி வந்த உடனே, ஓய்வு எடுத்து விடாதே என்று கமல் சொன்னார். அடுத்த படத்துக்கு மக்கள் கொடுத்த நம்பிக்கையோடு நகர்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், 'கடந்த 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான். உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது. சாய்ந்து படுத்துவிட மாட்டேன். வெற்றி ஈஸியாக வந்தது இல்லை; இனி பதற்றமாக இருக்கையின் நுணியில் நான் அமரவேண்டும்.