இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசன், 'ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000 உள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலோ ரூ.3000' எனப் பதிவிட்டிருந்தார்.
கரோனா பரிசோதனை கட்டணத்தை தமிழ்நாடு குறைக்காதது ஏன்? - கமல் ஹாசன் - Kamal haasan news
சென்னை: மற்ற மாநிலங்களில் கரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்த போதிலும், தமிழ்நாட்டில் குறைக்காதது ஏன் என நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் ஹாசன் ட்வீட்
மேலும், 'பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழ்நாடு மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க...பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல்!