தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் நீதி மய்யத்தில் ‘மய்யம் மாதர் படை’! - MNM news

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ எனும் பிரிவு ஆரம்பிக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மநீம-வில் ‘மய்யம் மாதர் படை’
மநீம-வில் ‘மய்யம் மாதர் படை’

By

Published : Dec 5, 2020, 6:13 PM IST

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், “பெண் சமத்துவத்தை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி தங்கள் செயல்பாடுகளிலும் அவர்களுக்கு சரியான பங்களிப்பை கொடுத்து அவர்கள் கரம் உயர்த்த விரும்புகிறது.

அவ்வகையில் புதியதோர் முன்னெடுப்பாக "மய்யம் மாதர் படை" எனும் பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது.

கட்சியின் கட்டமைப்பு மற்றும் அணிகளில் பொறுப்பு வகிக்கும் மகளிரும், கட்சியின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்கு பெறலாம். சில செயல் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த அதிரடியாக ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தப் பிரிவின் நோக்கம்.

கட்சி சாராத ஆனால் மக்கள் நலனிலும் தமிழகத்தைச் சீரமைப்பதில் ஒத்த நோக்கமும் கொண்ட பெண்களும் கூட இப்பிரிவில் இணைந்து செயல்படுவார்கள்.

இதில், டிசம்பர் 12, 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் சார்பில் பூத் அமைக்கப்படுகிறது. இதில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை 'மய்யம் மாதர் படை' மேற்கொள்ளவிருக்கிறது.

இந்தப் பிரிவு மகளிர் அணியின் சென்னை மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் அவர்களின் மேற்பார்வையில் செயல்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'இது காதலா, உணர்ச்சியா? - அன்பு காதலர்களுக்காக...

ABOUT THE AUTHOR

...view details