சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நேரில் விசாரணை செய்ய உள்ளார்.