சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாாளிகள் தண்டிக்கப்பட வேண்கும் என்று மனு வழங்கினார். அதன்பின் ஸ்ரீமதியின் தாயார் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எனது மகளின் வழக்கை குறுகிய காலத்திலும், குற்றவாளிகள் தப்பிக்க விடாமலும் விசாரிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
அந்த பள்ளி நிர்வாகிகள் சிலர் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தப்பிக்க விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு பரிசோதனை ஆவணம் மட்டுமே வழங்கப்பட்டது. வீடியோ ஆதாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணம் எங்களிடம் கொடுக்கப்படவில்லை. எனது மகளின் உடற்கூராய்வில் முழு திருப்தி இல்லை. நாங்கள் கேட்ட மருத்துவர்கள் வைத்து உடற்கூறு ஆய்வு செய்து இருந்தால் திருப்தி அடைந்து இருப்போம்.