தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி - kallakurichi municipality election case

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 19, 2022, 12:08 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடந்தது. அப்போது, அதிமுக உறுப்பினர்களை தவிர மற்றவர்கள், வாக்குச்சீட்டை திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புராயலுவிடம் காண்பித்த பிறகே வாக்குப்பெட்டியில் போட்டதாக அதிமுக கவுன்சிலர் பாபு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலில், தேர்தல் ரகசியத்தை அம்பலப்படுத்தியதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி இன்று (ஏப்.19) விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், அரசியல் சட்டப்படி, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து மட்டுமே தேர்தல் வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'சொற்ப தொகையை கொடுத்து மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தாதீங்க' நீதிமன்றம் அதிருப்தி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details