தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.2 கோடி செலவில் கைலாசநாதர் கோயில் குளம் சீரமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு - Minister sekar babu

மாதவரம் கைலாசநாதர் கோயில் திருக்குளம் 2 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

By

Published : Oct 30, 2021, 3:41 PM IST

சென்னை: மாதவரத்தில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு சென்னை, புறநகர் பகுதியில் இருந்து இங்கு வீற்றிருக்கும் சிவனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த கோவில் வாசலிலுள்ள திருக்குளத்தை 2 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில முதலமைச்சர் அறிவித்தார். இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இதற்கான பணிகளை இந்து அறநிலையத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (அக்.30) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மாதவரம் கைலாசநாதர் திருக்கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு செய்தார்.

கோயில் வருமானம் கோயிலுக்கே

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நூறாண்டு, ஆயிரம் ஆண்டுகளை கடந்து இருக்கக்கூடிய முழுமையாக கற்களால் கட்டப்பட்ட கோயில்களை புனரமைக்கவும், 12 ஆண்டுகள் முடிந்து ஆகம விதிப்படி திருக்கோயில்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 5 மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆய்வு பணிகளை செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாதவரத்தில் கைலாசநாதர் திருக்கோயில், கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் என்னென்ன அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதை ஆய்வு செய்தோம்.

குறிப்பாக கைலாசநாதர் திருக்கோயில் ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்களில் இருந்து எந்த வித வருமானம் இன்றி உள்ளது கடந்த மூன்றாண்டுகளில் அதிகபட்சமாக 92 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளது. ஆகவே திருக்கோயில் சார்ந்த இடங்களை தனியார் பயன்படுத்துதல், தனியார் வருமானங்களை அகற்றி திருக்கோயில் இருந்து வரக்கூடிய வருமானங்களை அதை கோயிலைச் சார்ந்த அனைத்து பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

தை மாதம் பணிகள் தொடக்கம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கைலாசநாதர் திருக்கோயில் குளத்தை சீரமைத்து தருவோம் எனக் கூறியிருந்தோம். மண் ஆய்வுப்பணி முடிந்துவிட்டது வெகு விரைவில் அந்த திருக்கோயில் திருப்பணி ஒப்பந்தம் கோரப்பட்டு தை மாதத்தில் பணிகள் தொடங்கவேண்டும் என்று துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல் அந்த திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதற்கு மேல் முறையீடு செய்து அந்த இடத்தை திருக்கோயில் இந்து சமய அறநிலை துறை வசம் எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தொடரந்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதுமுள்ள திருக்கோயில்களை முழுவதுமாக புனரமைப்பது என்ற முடிவெடுத்து, இந்தாண்டு மட்டும் 25 திருக்குளங்கள் ரூபாய் 15 கோடி செலவில் புனரமைக்கும் பணியை கையில் எடுத்துள்ளோம்.

அடுத்த ஆண்டின் மானியக் கோரிக்கைக்கு முன் அந்த பணிகள் துவங்கப்படும். திருக்குளங்கள் மழை நீர் உபரி ஆகாமல் தடுப்பதற்கும் அந்த பகுதியில் ஓடிய நிலத்தடி நீர் உயர்வதற்கும் திருக்குளங்கள் இன்றியமையாத காரணமாக உள்ளது.

சிலைகளுக்காக ஸ்ட்ராங் ரூம்

கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஐடில் விங் கோடு கலந்து ஆய்வு கொண்டுள்ளார். சுமார் 3007 திருக்கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டடத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.

முதற்கட்டமாக புலியூரில், நாகத்தீஸ்வரர் கோயில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஸ்ட்ராங் ரூம் திறந்து வைத்தோம். வெகுவிரைவில் ஓராண்டுக்குள் அனைத்து கோயில்களும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கபட்டு விட்டால் திருக்கோயில்கள் இருந்து சிலைகள் கடத்தப்படுவது தடுக்கப்படும் கடத்தப்பட்ட, மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஓராண்டு முடிவில் தகவல்களை தருவோம்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று முழுவதும் குறைந்தால் தான் கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க:ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details