தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நோ வேக்சின்' , 'நோ என்ட்ரி' : ககன் தீப் சிங் பேடி தகவல் - shankar diwal

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ககன் தீப் சிங் பேடி, kagan dheep singh bedi
kagan dheep singh bedi inspection in koyambedu market

By

Published : Jun 4, 2021, 1:18 PM IST

சென்னை: கோயம்பேடு காய்கறிச் சந்தையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சிஎம்டிஏ நிர்வாகச் செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் அரசின் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தனர்.

கோயம்பேட்டில் அனைவருக்கும் தடுப்பூசி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ககன் தீப் சிங் பேடி, "கோயம்பேடு சந்தை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை எனப் பல புகார்கள் வந்துள்ளன. எனவே பாதுகாப்பு, அதன் கண்காணிப்பை தீவிரமாக்குவது ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். சந்தையில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தவுள்ளோம். வியாபாரிகள், தொழிலாளிகள் என அனைவரும் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக, சந்தையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

4 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி

அதேபோல் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும். இதுவரை 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதே கரோனாவைக் கட்டுப்படுத்தும். எனவே, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோயம்பேடு காய்கறிச் சந்தை சுத்தம் செய்யப்படும்' எனக் கூறினார்.

முன்னதாக பேசிய காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், "கோயம்பேட்டில், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றப்படுவது இல்லை என்று புகார் வந்ததையடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அடுத்த 10 நாட்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்றார்.

மூன்றில் ஒரு பங்கு

இதனைத் தொடர்ந்து பேசிய சிஎம்டிஏ நிர்வாகச் செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு, "கடந்த மே மாதத்தில் மட்டும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் 11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காய்கறிச் சந்தையை இடம் மாற்றினால் மக்களுக்குச் சிரமம் ஏற்படும். கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கடைகளை திறப்பதற்கு ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற வெள்ளை மாளிகை.. விரைவில் வரும் தடுப்பூசிகள்!

ABOUT THE AUTHOR

...view details