தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டோருக்கு பேராபத்து' - வீரமணி

சென்னை: மத்திய அரசின் உயர்வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கை பிற்படுத்தப்பட்டோரின் வாய்ப்புகளை பறிக்கும்படியாக உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

K. Veeramani

By

Published : Jun 29, 2019, 9:23 AM IST

இது தொடர்பாக கி. வீரமணி வெளியட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ள நிலையில், மீதமுள்ள 31 விழுக்காடிற்கு அனைத்து வகுப்பினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் பொது பிரிவாக உள்ளது. தமிழ்நாடு உட்பட பல வட மாநிலங்களிலும் முன்னேறிய வகுப்பினரும் இந்த பொதுப்பிரிவில் போட்டியிடும் நிலை உள்ளது.

ஏற்கெனவே கல்வி, வேலை ஆகியவற்றில் முன்னேறிய அவர்களுக்கு அதிகமான எண்ணிக்கை பெற்றுள்ளனர். அவர்களுக்கு பத்து விழுக்காடு தருவது முறையல்ல. சமூகத்தில் உள்ள வாய்ப்பை உறுதி செய்து வஞ்சிக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்களைத் திறக்கவே இட ஒதுக்கீடு என்பது உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில், உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்க வேண்டும். அல்லாமல், ஆரோக்கியமாக மருத்துவப் பரிசோதனைக்கு வருபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, உள்ளே இருக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளியே தள்ளுவது போன்று உள்ளது அரசின் இந்த இட ஒதுக்கீடு கொள்கை.

மும்பையிலிருந்து வெளிவரும் தனியார் வணிக வார இதழிலில், ஐந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழுதியுள்ள ஓர் கட்டுரையில், மோடி அரசு வழங்கிய முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் மத்திய மனிதவள (கல்வி) துறையின்கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை பற்றி இந்தியா முழுவதும் 445 உயர்கல்வி நிறுவனங்களில் (2018 கணக்குப்படி) ஆய்வு செய்ததில், அவர்கள் ஏற்கெனவே 28 சதவிகித இடங்களைப் பெற்றுள்ளனர், கல்வி கற்று வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் போட்டியிட்டுப் பெற்ற இடங்கள் வாய்ப்புகள் வெகுவாகக் குறைவாகிவிடும் ஆபத்து மறைந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை உடைத்து நொறுக்கும் (Demolishing the basic structure of the Constitution of India) முயற்சியே இந்தப் பொருளாதார அடிப்படையிலான திட்டமாகும். எனவே தமிழ்நாடு அரசு இதை தடுப்பதில் உறுதியாக இருக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details