சென்னை:அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22-இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அது முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக, பதவி வகித்து வரும் அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம், பரிந்துரை செய்தது.
அதனை ஏற்ற குடியரசு தலைவர், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (பிப்ரவரி 14)நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய முனீஸ்வர் நாத் பண்டாரி, ”அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவேன். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை அதிகமான நேசிப்பதாக தெரிவித்தார்.