உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஏ.ஆர்.லட்சுமணன், மீனாட்சி தம்பதிக்கு ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் இறுதிச்சடங்கிற்காக, அவரது உடல் சொந்த ஊரான தேவகோட்டை எடுத்துச் செல்லப்பட்டது.