சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 6 ஆயிரத்து 596 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை ஜூன் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 628 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 6 ஆயிரத்து 596 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இதுவரை சிகிச்சையில்...
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 51 ஆயிரத்து 147 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது. இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் தற்போது 52 ஆயிரத்து 884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று குணமடைந்தவர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 10 ஆயிரத்து 432 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 58 ஆயிரத்து 785 என உயர்ந்துள்ளது.
இன்றைய உயிரிழப்பு
மேலும் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 57 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 109 நோயாளிகளும் என மேலும் 166 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 746 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை: 530432
கோயம்புத்தூர் : 215051
செங்கல்பட்டு: 154994
திருவள்ளூர்: 110056
சேலம்: 85299
திருப்பூர்: 80039
ஈரோடு: 85872
மதுரை: 71684
காஞ்சிபுரம்: 69630
திருச்சிராப்பள்ளி: 67855
தஞ்சாவூர்: 61859
கன்னியாகுமரி: 58307
கடலூர்: 57078
தூத்துக்குடி: 53847
திருநெல்வேலி: 47193
திருவண்ணாமலை: 48251