தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ரியல்மி லேப்டாப்

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை இங்கு சுருக்கமாக காணலாம்.

இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு
இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு

By

Published : Jun 15, 2021, 6:51 AM IST

முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. முதியோர் மீதான பார்வையை இளைஞர்கள் மாற்ற வேண்டும். முதியோர் உண்மையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவற்றைக் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் என்பதற்காகவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்

முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

இன்று முதல் இரண்டாம் தவணை

இன்று முதல் நியாயவிலைக்கடைகளில் இரண்டாம் தவணை கரோனா நிவாரண நிதி விநியோகம் செய்யப்படுகிறது. 14 மளிகை சிறப்பு தொகுப்பும் இன்று வழங்கப்படுகிறது.

14 மளிகை சிறப்பு தொகுப்பு

இன்றே கடைசி நாள்

தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. முன்னதாக மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15 வரை நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மின்கட்டணம்

ரியல்மி லேப்டாப், பேட் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ஜிடி 5ஜி மாடல் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் ஆக ரியல்மி புக், முதல் டேப்லெட் ஆக ரியல்மி பேட் ஆகியவைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ரியல்மி

யூரோ கப்

யூரோ கப்: போர்ச்சுக்கல், ஹங்கேரி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது.

யூரோ கப்

ABOUT THE AUTHOR

...view details