சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கையின்போது, குட்கா ஊழல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் பல வழக்குகள் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அறிக்கையை பார்க்காமல் குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றினார் நீதிபதி - முதலமைச்சர் - சிபிஐ
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த அறிக்கையை பார்க்காமல் குட்கா வழக்கை நீதிபதி சிபிஐ-க்கு மாற்றியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐடி முறையாக விசாரிக்காததால், அந்த வழக்கை நீதிமன்றம் சி.பி.ஐக்கு மாற்றியது. அதே போல் பொள்ளாச்சி விவகாரம் போன்ற பல வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. ஆனால் சிபிஐ அலுவலர்களுக்கு அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், குட்கா வழக்கை முதலமைச்சரின் கீழ் வரும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ததால், அந்த விசாரணை நேர்மையாக இருக்காது எனக் கூறி வழக்கை சிபிஐ-க்கு நீதிமன்றம் மாற்றியதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதை படித்துகூட பார்க்காமல் முதலமைச்சர் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை முறையாக விசாரிக்காது என தெரிவித்து, நீதிபதி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளார். என்னை விமர்சித்து உத்தரவிட்ட நீதிபதி குறித்து பேரவையில் வெளிப்படையாக பேச முடியாது” என்றார்.