தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைமை நீதிபதியின் பணிகளை தற்காலிகமாக இவர்தான் கவனிப்பார்! - சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமி தலைமை நீதிபதியின் பணிகளை கவனிப்பார் எனக் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Judge Duraisamy appointed as additional charge of looking CJ
Judge Duraisamy appointed as additional charge of looking CJ

By

Published : Nov 18, 2021, 6:28 AM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டார்.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கும்வரை நீதிபதி துரைசாமி தலைமை நீதிபதியின் பணிகளைக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவியேற்ற பிறகு, அவர் தலைமை நீதிபதி பணிகளைக் கவனிப்பார் என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:பெரும் மாசுபாடு ஏற்படுத்துபவை ஊடக விவாதங்கள்தாம் - உச்ச நீதிமன்றம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details