துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம், மதுரவாயல் சீமாட்டி அம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்.
நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜே.பி.நட்டா...! - துக்ளக் ஆண்டு விழா
சென்னை: ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள நம்ம ஊரு பொங்கல் விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
jp-natta
நம்ம ஊரு பொங்கல் என கொண்டாடப்படும் இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், கிராமிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாநிலம் முழுவதும் வேல் யாத்திரையை நடத்திய பாஜக, தற்போது தமிழர் பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளது.