சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு வரும் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பி.பி.ஓ., வங்கி, காப்பீடு, மின்வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி), மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல், விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வரும் 18ஆம் தேதி சென்னையில் வேலை வாய்ப்பு முகாம்'
சென்னை: பட்டியலினம், பழங்குடி மக்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் வரும் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
பட்டதாரிகள், அதற்கும் அதிகமான கல்வித் தகுதி உடையவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் தகுந்த பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேரந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும், தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள பொதுப் பிரிவினருக்கும் முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேரடியாக முகாம் நடக்கும் இடத்திற்குச் செல்லலாம் அல்லது தங்களது பெயர்களை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.