தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏ.ஆர்.ரகுமானின் கருத்துக்கு ஜெயக்குமார் வரவேற்பு! - தமிழ்தான் இணைப்பு மொழி

தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறிய கருத்து பாராட்டத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

AR Rahman Commenting on Amitsha Statement
AR Rahman Commenting on Amitsha Statement

By

Published : Apr 11, 2022, 2:45 PM IST

Updated : Apr 11, 2022, 11:09 PM IST

சென்னை:5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில், சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப். 11) ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம். மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை.

தமிழை பாராட்டும் பிரதமர்:உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழ்நாட்டில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். ஏ.ஆர் ரகுமானின் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கதக்கது. மேலும், பிரதமரே பல மேடைகளில் தமிழ் இலக்கணத்தை சுட்டிக்காட்டி பேசு வருகிறார். தமிழ் உயர்வான மொழி என பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம்: திமுக ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயல். உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசத்தால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் இருந்த டெண்டர், திமுக ஆட்சியில் அக்கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமானின் கருத்துக்கு ஜெயக்குமார் வரவேற்பு

கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், சசிகலா வழக்கு குறித்த கேள்விக்கு, "அதிமுகவை பொறுத்தவரை சிறப்பான வாதங்களை எடுத்து வைத்துள்ளோம். தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்" எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் - நீதிமன்றம் தீர்ப்பு

Last Updated : Apr 11, 2022, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details