சென்னை: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மேரி பிரேமா (59). இவர் ஆவடி அருகே பாண்டேஸ்வரம் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார்.
இன்று (பிப்ரவரி 28) பள்ளிக்குச் செல்ல வழக்கம்போல்ஆவடி பேருந்து நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். ஆவடி மார்க்கெட் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது முகக்கவசம் அணிந்தபடி வந்த ஒருவர் மேரியிடம் தன்னை அரசு அலுவலர் என்று கூறிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார்.
அரசு அலுவலர்போல் நடித்து பள்ளி ஆசிரியையிடம் நகை திருட்டு இதையடுத்து மேரியிடம் முகக்கவசம் ஏன் அணியவில்லை எனக் கேட்டுள்ளார். பின்னர் பேச்சுக் கொடுத்து மேரியுடன் நடந்துவந்த நபர் இந்தப் பகுதியில் செயின் பறிப்புச் சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. ஆகையால் தங்க நகைகளைக் கழற்றி பத்திரமாக கைப்பையில் வைக்கும்படி கூறியுள்ளார்.
இதை நம்பிய மேரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்கச் செயின்களையும், கையில் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்களையும், கழற்றி தனது கைப்பையில் வைக்க முயன்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபருடன் வந்த மற்றொரு நபர் வாங்கி உணவுப் பையில் வைத்துள்ளார். ஆனால் அந்நபர் உணவுப் பையில் வைப்பதுபோல் நகையை வைத்து சட்டென்று அந்த 10 சவரன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றவுடன் ஆசிரியர் மேரி தன் பையைப் பார்க்கும்போது நகை காணவில்லை.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்நபர்களை பின்னாடியே விரட்டிச் செல்லும் காட்சி அப்பகுதியில் வைத்துள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து மேரி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து சிசிடிவி உதவியோடு சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்த கொள்ளையன் கைது