கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி எனவும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு மாத அளவு தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வு செய்து ஒரு குடும்பம் ஐந்து சவரன் நகைக்கடன் வைத்திருந்தால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 110 விதியின் கீழ் அது தள்ளுபடி செய்யப்படும்.
முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இதனால், தமிழ்நாடு அரசுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் செலவாகும். கூட்டுறவு நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு முறையாக செய்யும்.
நகைக்கடனில் முறைகேடு செய்த கூட்டுறவு சங்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்கள் நவீன வசதிகளைக் கொண்டு கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு: சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா