சென்னை:விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர், 1ஆவது விரிவாக்கம் பகுதியில் வசிப்பவர் குமார் சுப்பிரமணியன்(61). ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான இவர் கடந்த 21ஆம் தேதி, ஜி.எஸ்.டி அலுவலரான மனைவி லட்சுமியுடன் வட மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
எனவே, வீட்டில் இவர்களது மகன் புவனேஷ்வரன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று(ஆக.25) மகன் புவனேஷ்வரனும் வீட்டைப்பூட்டி விட்டு பணி நிமிர்த்தமாக பூனே சென்று விட்டார். இதனையடுத்து ஆன்மிக சுற்றுலா முடித்துக்கொண்டு குமார் சுப்பிரமணியன் இன்று(ஆக.26) அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பாரத்த போது பீரோவில் வைத்திருந்த 70 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போனது தெரியவந்தது.
இதனையடுத்து சுப்பிரமணியன் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர்கள் கைது