தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே இருப்பதால் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், பரப்புரை பொதுக்கூட்டம் என அரசியல் தலைவர்கள் பரபரப்புடன் இயங்கிவருகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார் மகன்! - ஜெயக்குமார்
சென்னை: மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடவிருக்கும் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
vardhan
இதற்கிடையே மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அதிமுக வேட்பாளரகள் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடவிருக்கும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அதிமுக எம்.பி.யுமான ஜெயவர்தன் அடையாறில் இருக்கும் தேர்தல் ஆணைய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Last Updated : Mar 22, 2019, 3:19 PM IST