தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து அதிமுக விருப்ப மனு பெற்றுவருகிறது. இந்நிலையில், கொளத்தூர் அல்லது வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டுமென 20 அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.