முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதற்காக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை அதிமுகவினர் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணிகளுக்காக திருவல்லிக்கேணி காவல் நிலையம் முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.