தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை முதல் வாலாஜா சாலை வழியாக ஜெயலலிதா நினைவிடம் வரை இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவுதினம் - ஜெ. தீபா மரியாதை - ஜெ. தீபா மலர் தூவி மரியாதை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜெ. தீபா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெ. தீபா
இந்நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தனது கணவர் மாதவனுடன் ஜே. நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.