தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை: அதிமுக - அமமுக இடையே தள்ளுமுள்ளு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக, அமமுக தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ops eps, jayalalitha memorial, admk ammk cadres issue, ops eps paid homage, jayalalitha memorial day, ஓபிஎஸ் இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை, அதிமுக அமமுக கட்சியினரிடைையே தள்ளுமுள்ளு, ஓ பி எஸ், இ பி எஸ்
ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை

By

Published : Dec 5, 2021, 2:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவரது நினைவிடத்தில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது அவர்களது வாகனங்களை அமமுகவினர் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து முடங்கியது.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக அமமுகவினர் முழக்கமிட்டனர். இதனால் அதிமுக, அமமுக தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அதிமுக, அமமுக கட்சியினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுத்ததால் இந்த பிரச்னை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிடிவி தினகரன் அஞ்சலி

ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அமமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துனர்.

அதிமுக - அமமுக கட்சியினரிடைையே தள்ளுமுள்ளு!

"அம்மா காட்டியபாதையில் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்கிறோம்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிங்க:அதிமுக உள்கட்சி தேர்தல்: ஓபிஎஸ் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு?

ABOUT THE AUTHOR

...view details