சென்னை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும் (தலை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின், வால் என்றால் காவல் துறையினர்).
திமுக அரசானது இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்களை தடுக்க முடியும். காவல் துறையினர் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாக தான் அமையும்.