சென்னை ராயபுரத்திலுள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், விழா மேடையில் 'ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதான்டா வளர்ச்சி' என்ற எம்ஜிஆரின் பாடலைப் பாடி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
'வாருங்கள் பறவைகளை ஆவணப்படுத்துவோம்' - மதுரை பறவை ஆர்வலர்களின் முயற்சி
மிதிவண்டியை உபயோகித்தால் என்னென்ன நன்மை வரும் என்று மாணவர்களுக்கு விளக்கம் தந்த அவர் பின்னர் பிறந்தநாளில் பள்ளி வந்த மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய 16 பொருட்கள் எவை என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டு, அதற்குப் பதில் கூறிய மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் பரிசளித்தார்.
பின்னர் மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார், அதனைத் தானும் மேடையிலேயே ஓட்டிச் சென்று மாணவர்கள் மத்தியில் அசத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
ஜெகன் மோகனை சந்தித்துப் பாராட்டிய நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி
அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகும் நேரத்தை அதிமுக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்ற அமைச்சர் பாஸ்கரின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், 'அது அவருடைய சொந்த கருத்து என்றும் கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் கூறினார்.
பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று கூறிய அவர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெறாத ஒன்றை நடந்ததாக ரஜினிகாந்த் கூறி மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றார்.
மேலும், துக்ளக் பத்திரிகையில் இதனை எழுதிய சோ, சில அமைப்புகள் கூறிய தகவலின் அடிப்படையில் வைத்தே இந்தக் கட்டுரை எழுதினோம் என்று அன்றே கூறினார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி எங்களைப் பொறுத்தவரை பெரியார் மதிக்கப்பட வேண்டியவர். அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.