தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு கோவிட்-19 பாதிப்பு: 569 பேருக்கு தொற்று உறுதி; 642 பேர் குணமடைந்தனர்! - jan 24 tamilnadu covid update

தமிழ்நாட்டில் புதிதாக 569 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், 642 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கரோனா, jan 24 2020 tn covid updates, corona update in tamilnadu, tn corona update today, இன்று கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில், இன்று கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில், இன்று கொரோனா, tamilnadu covid 19 update, jan 24 tamilnadu covid update, jan 24 tn covid update
jan 24 2020 tn covid updates

By

Published : Jan 24, 2021, 8:38 PM IST

சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை ஜனவரி 24ஆம் தேதிக்கான கோவிட்-19 பாதிப்பு புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், “புதிதாக 62 ஆயிரத்து 405 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 566 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த மூன்று நபர்களுக்குமென 569 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 30 ஆயிரத்து 315 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் 8 லட்சத்து 34 ஆயிரத்து 740 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் 4 ஆயிரத்து 904 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 642 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 17 ஆயிரத்து 520 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் என 7 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  1. சென்னை - 2,30,195
  2. கோயம்புத்தூர் - 54,021
  3. செங்கல்பட்டு - 51257
  4. திருவள்ளூர் - 43,399
  5. சேலம் - 32,296
  6. காஞ்சிபுரம் - 29,162
  7. கடலூர் - 24,881
  8. மதுரை - 20,923
  9. வேலூர் - 20,659
  10. திருவண்ணாமலை - 19,330
  11. தேனி - 17,052
  12. தஞ்சாவூர் - 17,617
  13. திருப்பூர் - 17,734
  14. விருதுநகர் - 16,540
  15. கன்னியாகுமரி - 16,740
  16. தூத்துக்குடி - 16,249
  17. ராணிப்பேட்டை - 16,085
  18. திருநெல்வேலி - 15,523
  19. விழுப்புரம் - 15,152
  20. திருச்சிராப்பள்ளி - 14,588
  21. ஈரோடு - 14,224
  22. புதுக்கோட்டை - 11,526
  23. கள்ளக்குறிச்சி - 10,867
  24. திருவாரூர் - 11,146
  25. நாமக்கல் - 11,541
  26. திண்டுக்கல் - 11,185
  27. தென்காசி - 8,391
  28. நாகப்பட்டினம் - 8,394
  29. நீலகிரி - 8,156
  30. கிருஷ்ணகிரி - 8,039
  31. திருப்பத்தூர் - 7,553
  32. சிவகங்கை - 6,638
  33. ராமநாதபுரம் - 6,402
  34. தர்மபுரி - 6,565
  35. கரூர் - 5,373
  36. அரியலூர் - 4,675
  37. பெரம்பலூர் - 2,261
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1033
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details