சென்னை அம்பத்தூரில் அனைத்து ஜமாஅத் அமைப்புகள் சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் அம்பத்தூரில் உள்ள அனைத்து ஜமாத்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் சர்ச்சையாக பேசி வருவதாகவும் உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை கண்டித்ததோடு அவர் தன் நிலைப்பாட்டை இதில் இருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அனைத்து ஜமாத்கள் சமுதாய இயக்கங்கள் பொதுக்கூட்டம் இதையும் படிங்க: பாஜகவின் குரல்தான் ரஜினி - எம்.பி. ஜோதிமணி!