சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து 'பீஸ்ட்’ திரைப்படம் இயக்கி கொண்டிருக்கும் போதே நடிகர் ரஜினிகாந்துடன் ’ஜெயிலர்’ திரைப்படம் ஒப்பந்தமானது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
சென்னையில் ”ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ஜெயிலர் திரைப்படம் தொடர்பாக பத்திரிககையாளர் எழுப்பிய கேள்விக்கு வரும் (ஆக.15) ஆம் தேதிக்கு மேல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் குழுமம் இன்று 11 மணியளவில் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. மேலும் சென்னை ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கு பின்புறம் செம்மஞ்சேரி காவல் நிலையம் என்று செட் அமைத்து ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:வெளியானது ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக்