சென்னைஅரும்பாக்கம் வங்கிக்கொள்ளை வழக்கில் முக்கியப்பங்கு வகித்த 6 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் இன்று (செப்.22) உத்தரவிட்டுள்ளார்.
அரும்பாக்கம் தனியார் கோல்டு லோன் நிறுவனத்தில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதைத்தொடர்ந்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் இறுதியாக அந்நிறுவன ஊழியர் முருகன், அவனது நண்பன் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், கேப்ரியல் மற்றும் இவர்களுடன் இணைந்து நகைகளை விற்க உதவிய கோவையைச்சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மருமகன் ஸ்ரீவத்சன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தவிர, கொள்ளைபோன 31.7 கிலோ தங்க நகைகளும் போலீசாரால் மீட்கப்பட்டன.