சென்னை: பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’ஜெய் பீம்’. முன்னதாகவே பல சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாகண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர் காவல்துறையினரை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது. இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் உண்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் மற்றொரு உண்மை கதாப்பாத்திரமும், ராஜாகண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்டியதற்காக தங்களுக்கு உரிமைத் தொகை வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வரும் 26-ஆம் தேதிக்குள் சாஸ்திரி நகர் காவல்துறையினர் மனுதாரர் சுட்டிக்காட்டிய சூர்யாவின் 2D நிறுவனம் உட்பட சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் சம்மந்தப்பட்ட சாஸ்த்ரி நகர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அம்பேத்கர் மணிமண்டபம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.