தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேற்கு, கடலோர மாவட்டங்களில் லேசான மழை - வானிலை ஆய்வு மையம்

மேற்கு, கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

By

Published : Aug 3, 2021, 1:33 PM IST

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், "தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயமுத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட் 5, 6: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட் 7: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

  • வங்கக் கடல் பகுதிகள்
    ஆகஸ்ட் 3 முதல் 7 வரை: தென் மேற்கு வங்கக் கடல், தென் கிழக்கு இலங்கைப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • அரபிக்கடல் பகுதிகள்
    ஆகஸ்ட் 3 முதல் 7 வரை: தென் மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கிரீமிலேயர் வரம்பில் வேளாண் வருமானத்திற்கு விலக்கு - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details