தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ. 532 கோடி வரி ஏய்ப்பு - ஒத்துக்கொண்ட வேலம்மாள்!

சென்னை: 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வேலம்மாள் கல்வி நிறுவனம் ஒத்துக்கொண்டது என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

velammal
velammal

By

Published : Jan 24, 2020, 11:52 PM IST

தமிழ்நாடு முழுவதும் வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 62 இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மதுரையிலுள்ள வேலம்மாள் கவ்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து வருமானவரித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்த சோதனையில் ரூபாய் இரண்டு கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.532 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாததையும் வேலம்மாள் ஒத்துக்கொண்டுள்ளது.

பள்ளி கல்லூரி மாணவர்களிடமிருந்து முறைகேடாக பணம் வசூலித்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. வேலம்மாள் மருத்துவமனையில் மக்களுக்கு உரிய ரசீது வழங்கப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரிச் சோதனை நிறைவடைந்துள்ளதாகவும், இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிஷ்கின் எனக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார் - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details