சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, அவர் தொடர்புடைய 36 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியுடன் இளங்கோவன் இந்த சோதனையில் ரூ.29.7 லட்சம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ பேருந்துகள், 3 ஹார்டிஸ்கள், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி வைப்பு தொகை 68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்?