சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் அறையான C பிளாக், 10ஆவது மாடியிலுள்ள E அறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஆர்.பி உதயகுமார் அறையில் வருமானவரித் துறை சோதனை - வருமானவரித் துறை சோதனை
சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் அறையில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
rb udayakumar
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை 12.30 மணியளவில் முடிந்தது. இந்த சோதனையில், பணம் மற்றும் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.