மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முரசொலி அலுவலகத்தில் அவரது சிலை திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சென்னை வந்தார் மம்தா! - கருணாநிதி சிலை திறப்பு விழா
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார்.
Mamata Banerjee
இந்த விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அவரை திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பேசிய மம்தா, "கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைத்ததால், விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.