தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பேருந்தில் மோதி ஐடி ஊழியர் உயிரிழப்பு - ஐடி ஊழியர் பலி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி அரசுப் பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த சிசிடிவி காட்சி
விபத்து நடந்த சிசிடிவி காட்சி

By

Published : Nov 1, 2021, 5:33 PM IST

சென்னை: பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 5E தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து சின்னமலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் மோதியுள்ளார். இந்த விபத்தில் இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் கைது

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் நங்கநல்லூரைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற ஐடி ஊழியர் என்பது தெரியவந்தது. வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையிலுள்ள பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி பேருந்தில் மோதியது தெரியவந்தது.

விபத்து நடந்த சிசிடிவி காட்சி

அதனடிப்படையில் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:புதுமணத் தம்பதி திருமணமான மூன்றே நாள்களில் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details