தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

27 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி - சென்னை அண்மைச் செய்திகள்

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருப்பூர் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு இ-பாஸ் விண்ணப்பித்து, அனுமதி பெற்று பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இ - பாஸ்
இ - பாஸ்

By

Published : Jun 20, 2021, 1:43 PM IST

Updated : Jun 20, 2021, 5:41 PM IST

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சில தளர்வுகளுடன் அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஏற்கனவே அமலில் இருந்த சில ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருப்பூர் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் விண்ணப்பித்து, அனுமதி பெற்று பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கான இ-பாஸை பெற திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடமிருந்து, இணையவழியாக (https://eregister.tnega.org) இ பாஸ் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிப்போர், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைகோ

Last Updated : Jun 20, 2021, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details