அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று, நாகூர் தர்கா டிரஸ்டி செய்யது யூசுப் சாஹிப் காதிரி, அகில இந்திய சுன்னத் உல் ஜமாத் சுல்தான் கலிபா காதிரி, சாஹிப்பர் மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஜான் செய்யது மீரான் சாஹிப் காதிரி, ஆகியோர் சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அதிமுகவிற்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு! - முஸ்லிம் அமைப்புகள்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று இஸ்லாமிய அமைப்புகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன.
admk
இதேபோல் நவாப் வாலாஜா பள்ளி கூட்டமைப்பு முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் முகலி, தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷனின் செய்யது முஹம்மது கலிபா சாஹிப், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். அப்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்!
Last Updated : Mar 8, 2021, 4:35 PM IST