திமுகவில் தலைவருக்கு அடுத்தப்படியான முக்கிய பொறுப்புகளாக இருப்பவை பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள். இப்பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (செப்டம்பர் 2) வழங்கப்பட்டன. இந்நிலையில், பொதுச்செயலாளராக தற்போதைய கட்சிப் பொருளாளர் துரைமுருகனும், பொருளாளராக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” திமுக வரலாற்றில் முதன் முறையாக ஆன்லைனில் கட்சியின் பொதுக்குழு வரும் 9ஆம் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தை நடத்துவது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் நாளை (செப்டம்பர் 3) ஆலோசனை நடைபெற உள்ளது.